spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசொத்துகுவிப்பு வழக்கு… ஐ.பெரியசாமி மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்…

சொத்துகுவிப்பு வழக்கு… ஐ.பெரியசாமி மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்…

-

- Advertisement -

அமலக்கத்துறை நோட்டீசுக்கு எதிராக அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.சொத்துகுவிப்பு வழக்கு… ஐ.பெரியசாமி மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்…

கடந்த 2006-ஆம் ஆண்டுமுதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சராகப் பதவி வகித்தவா் அமைச்சா் ஐ.பெரியசாமி. அந்தக் காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக  2.35 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சோ்த்ததாக அவா் மீது தமிழ்நாடு ஊழல் தடுப்புத் துறை காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் ஐ.பெரியசாமி, அவரின் மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமாா், பிரபு ஆகியோா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

we-r-hiring

ஆனால் காவல்முறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இந்த வழக்கில் இருந்து அனைவரையும் விடுவித்து திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிா்த்து ஊழல் தடுப்புத் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், விசாரணை நீதிமன்ற தீா்ப்பை ரத்து செய்தது. இதை எதிா்த்து ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், ஊழல் தடுப்பு காவல்துறை தொடர்ந்த வழக்கு  அடிப்படையில் அமைச்சா் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினா் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்ததோடு, ஐ.பெரியசாமி, அவரது மக் எம்எல்ஏவுமான செந்தில்குமாா் எம்.எல்.ஏ, மகள் இந்திரா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

அந்த சோதனையின்போது சொத்து, வங்கிக் கணக்கு, முதலீடு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை அமலாக்கத் துறை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து, சொத்துக்கள் முடக்கம் தொடா்பாக விளக்கம் கேட்டு ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரியும், அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை  சென்னை உயர்நீதிமன்றம்  தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி மற்றும் செந்தில்குமார் எம்.எல்.ஏ ஆகியோர் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி திபான்கர் தாத்தா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர். அப்போது மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மனு வாபஸ் பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அடித்து நொறுக்கிய ஸ்டாலின் குரல்! பதறியடித்த பனையூர் பிகில்! சேர்ந்து பொளக்கும் அதிமுக! ராஜகம்பீரன் நேர்காணல்!

MUST READ