spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇசைஞானி இளையராஜா பிறந்ததாள்- தலைவர்கள் வாழ்த்து

இசைஞானி இளையராஜா பிறந்ததாள்- தலைவர்கள் வாழ்த்து

-

- Advertisement -

இசைஞானி இளையராஜா பிறந்ததாள்- தலைவர்கள் வாழ்த்து

இந்திய சினிமாவின் இசைக்கு முகவரி எழுதியவர், தமிழ் சினிமா படங்களுக்கு தன் இசையால் கம்பீரம் கொடுத்தவர், ஸ்வரங்களாலும் மெட்டுக்களாலும் தன் சாம்ராஜ்யத்திற்கான கோட்டையை கட்டியவர், பெருவாரியான மக்களின் மனம் கவர்ந்த கள்வன், ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த இசைஞானி இளைய ராஜா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Image

இசையமைப்பாளர் இளையராஜாவின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தார். சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் அலுவகத்திற்கு நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். மேலும் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலிம், “காலைப் பொழுது இனிதாய் மலர – பயணங்கள் இதமாய் அமைய – மகிழ்ச்சிகள் கொண்டாட்டமாய் மாற – துன்பங்கள் தூசியாய் மறைய – இரவு இனிமையாய்ச் சாய தமிழ்நாட்டின் தேர்வு ‘இசைஞானி’ இளையராஜா!

we-r-hiring

அவர் இசைக்கருவிகளை மீட்டுவதில்லை; நம் இதயங்களை வருடுகிறார். அவரே உணர்வாகி நம்முள் உருகுகிறார்.…” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Image

இதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “ஏறத்தாழ ஐம்பதாண்டுக் காலமாக, இசையை ஆளும் முடிசூடா மன்னரும், பாராளுமன்ற உறுப்பினருமான இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக பாஜக சார்பாக இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இசைஞானி அவர்கள், இன்று பல கோடி மக்களின் உணர்வுகளை ஆற்றுப்படுத்தும் இசை மருத்துவராக, நம் தேசத்தின் அடையாளங்களில் ஒருவராக விளங்குவதில் நம் அனைவருக்கும் பெருமையே.

இன்று காலை, இசைஞானி அவர்களைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி, அவரது ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இசைஞானி அவர்கள், நீண்ட ஆயுளுடன் இன்னும் பல ஆண்டுகள் இசையால் இந்த உலகை ஆள எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “இசைஞானி இளையராஜா அவர்களின் 80-ஆவது பிறந்தநாள்! இன்று 80-ஆம் பிறந்தநாளைக் கொண்டாடும் இசையமைப்பாளரும், சக மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து மக்களுக்கு இசை மருத்துவம் அளிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Image

இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், “திரையிசைச் சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களைக் கடந்து நிலைத்து மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது. இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் என் அன்புக்கும் ஆச்சரியத்துக்கும் மிக உரிய உயரிய அண்ணன் இளையராஜா. இன்று பிறந்த நாள் காணும் இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ