spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகமல் சார வச்சுக்கிட்டு அப்படி சொல்லாதீங்க… மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன்!

கமல் சார வச்சுக்கிட்டு அப்படி சொல்லாதீங்க… மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன்!

-

- Advertisement -

பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் கர்ணன், போன்ற வெற்றி படங்களை இயக்கியவர்.
தற்போது இவர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘மாமன்னன்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து பகத் பாஸில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, கமல், சிவகார்த்திகேயன், சூரி, பா ரஞ்சித், வெற்றிமாறன், விஜய், விஜய் ஆண்டனி உள்ளிட்ட திரை உலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

we-r-hiring

இந்த விழாவை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன் ” மாமன்னன் படத்தின் மீது மிகவும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படம் நிச்சயமாக வெற்றி அடையும் .இயக்குனர் மாரி செல்வராஜ் இந்தியாவின் முக்கியமான சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மாறிக்கொண்டே இருக்கிறார். இவர் இயக்கத்தில் வெளிவரும் படங்கள் அனைத்துமே தரமானதாக இருக்கிறது. உதயநிதி சார் விளையாட்டாக சினிமாவுக்குள் வந்தார். தற்போது விளையாட்டு துறைக்கே அமைச்சர் ஆகிவிட்டார்.” என்று கூறியுள்ளார்.

முதல்ல என் கெட்அப் நல்லாருக்குனு சொல்லாதீங்க. அதுவும் கமல் சார்-அ வச்சுகிட்டு இது சொல்லாதீங்க. பர்ஸ்ட் லுக் வரவரைக்கும் வெளியே காட்ட கூடாதுனு டைரக்டர் சொல்லிருக்காரு.” என்றவாறு பல விஷயங்களை அவருக்கே உரித்தான பாணியில் ஃபன் ஆக பேசியுள்ளார்.

MUST READ