spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘குலசாமி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘குலசாமி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

-

- Advertisement -

நடிகர் விமல் தற்போது ‘குலசாமி‘ என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். குட்டிப்புலி, தர்மதுரை, சண்டக்கோழி 2, தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த சரவண சக்தி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக தடம், தாராள பிரபு உள்ளிட்ட படங்களில் நடித்த தன்யா ஹோப் நடித்துள்ளார். வில்லனாக இயக்குனர் சரவண சக்தியின் மகன் சூர்யா நடித்திருக்கிறார்.
இப்படத்தை MIK ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் சஞ்சித் சிவா ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. பாடகர் மகாலிங்கம் இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். குறிப்பாக இந்த படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ளார்.

we-r-hiring

இந்தப் படத்தில் விமல் ஆட்டோ ஓட்டுநராக நடித்துள்ளார். இந்தப் படம் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

“பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளை சட்டத்தின் முன்னிறுத்துவதை விட அவர்களை கொடூரமாக கொலை செய்வதே ஒரே தீர்வு” என்பதை முழு நீள படத்தின் மூலம் விளக்கியுள்ளார் இயக்குனர் சரவண சக்தி.

இந்தப் படம் கடந்த மே 5ம் தேதி திரையில் வெளியாகியிருந்த நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் இந்த படம் விரைவில் Tentkotta ஓடிடியில் ஜூன் 16-ம் தேதி ரிலீஸ் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ