spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅப்பா, இப்படி நடக்கும்னு நான் நினைத்து கூட பார்க்கல - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருக்கமான பதிவு!

அப்பா, இப்படி நடக்கும்னு நான் நினைத்து கூட பார்க்கல – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருக்கமான பதிவு!

-

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே 3, வை ராஜா வை, சினிமா வீரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். அதன் பிறகு தற்போது   படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் செந்தில், தம்பி ராமையா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

we-r-hiring

மேலும் இந்த படத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரஜினிகாந்தின் காட்சிகள், இப்படத்தில் இரண்டு சண்டை காட்சிகள் உட்பட குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த படம் கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகி வருவதால் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் இவர்களுடன் இணைந்து நடிக்கிறார்.

இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது மற்றும் ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கிறார்.

‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பானது தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.

laal-salaam
laal-salaam

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ” நான் உங்களை பார்க்கிறேன். ஆனால் உங்களை வைத்து ஒரு படம் இயக்குவேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை. நான் உங்களை ரசிக்கிறேன் ……. உங்களை வணங்குகிறேன்…… பெரும்பாலான நேரங்களில் உங்களுடன் இந்த உலகத்தை பார்க்கிறேன்…… நீங்கள்தான் நான் என்று உணர்கிறேன்…… ஒவ்வொரு நாளும், அப்பா உங்களை நேசிக்கிறேன்…….. ” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ