spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்வியாபாரி தீக்குளித்து தற்கொலை

வியாபாரி தீக்குளித்து தற்கொலை

-

- Advertisement -

வியாபாரி தீக்குளித்து தற்கொலை

காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் பயாஸ் ராஜா . இவருக்கு வயது 60.  இவரின் தம்பி சபீர்ராஜா வயது 58. இவர்கள் இரண்டு பேரும் கடந்த பல வருடங்களாக கொடைக்கானல் கவி தியாகராஜர் ரோட்டில் கைவினைப் பொருட்கள் வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருகின்றனர்.

வியாபாரி தீக்குளித்து தற்கொலை
வியாபாரி தற்கொலை

கட்டிடத்தின் மேல் தளத்தில் பயாஸ் ராஜாவும், கீழ் தளத்தில் சபீர் ராஜாவும் விற்பனை செய்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே கடைக்கு செல்லும் பொது நடைபாதை யாருக்கு சொந்தம் என்பதில் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதனால் பயாஸ் ராஜா தனக்கு சொந்தமான ஒரு பகுதியை இரும்பு வேலியால் அடைத்துக் கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது தம்பி சபீர் ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

we-r-hiring

மத்திய பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

பின்னர் தனது கடை முன்பு நின்று பயாஸ் ராஜாவின் தம்பி சபீர்ராஜா உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இச்சம்பவத்தைப் பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சபீர் ராஜா உயிரிழந்தார். இது குறித்து கொடைக்கானல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாபாரி தீக்குளித்து தற்கொலை
கொடைக்கானல் போலீஸ் விசாரணை

 

 

MUST READ