- Advertisement -
உத்தரபிரதேசம், பீகாரில் வெயில் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 3 நாளில் 98 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாடு முழுவதும் இந்தாண்டு வெயிலின் கொடுமை அதிகமாக உள்ள நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் பகல் நேரத்தில் 44 டிகிரி வெப்பக் காற்று வீசுகிறது. இதனால் வெப்ப பக்கவாதம் தொடர்பான பிரச்னைகளால் நூற்றுக்கணக்கான மக்கள் மாவட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 3 நாட்களில் உத்தரபிரதேச மாநில மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் 54 பேர் வெப்ப பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.