
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் அருங்காட்சியகம் மற்றும் திரையரங்கம் அமைக்க ரூபாய் 4.3 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மூன்று ஆண்டுகளுக்குள் அருங்காட்சியகம் மற்றும் திரையரங்கம் கட்டி முடிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த தலைமைச் செயலாளர் யார்?- விரிவாகப் பார்ப்போம்!
3டி, 7டி திரையரங்கம் அமைத்து சுற்றுச்சூழல் பல்லுயிர் குறித்து ஆவணப்படங்கள் திரையிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு குறித்து மக்கள் புரிந்துக் கொள்ள வசதியாக அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.
15 நிபந்தனைகளுடன் பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி!
தமிழகத்தில் இருக்கும் ஒரே விலங்கியல் பூங்கா என்றால் அது வண்டலூர் பூங்காதான். இந்த பூங்காவில் புலிகள், மலைப்பாம்பு, மான், சிங்கம், ஒட்டகம், மயில், முயல், யானைகள், காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள், பறவைகள் உள்ளது.