
மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

“50 நாட்களாக மணிப்பூர் பற்றி எரிகிறது; ஆனால் பிரதமர் மோடி….”- ராகுல் காந்தி கண்டனம்!
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவாக, மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னத்தை ரூபாய் 81 கோடி மதிப்பீட்டில் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. கடலில் நினைவுச் சின்னம் அமையவிருப்பதால், பல்வேறு அமைச்சகங்களின் ஒப்புதலைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் தந்த நிலையில், 15 நிபந்தனைகளுடன் சென்னை மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இறுதி ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஐஎன்எஸ் அடையாறு கடற்படைத் தளத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். கட்டுமான பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரைப் பயன்படுத்தக் கூடாது. திட்டத்தைச் செயல்படுத்தும் போது, நிபுணர் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். அவசர கால மீட்புப் பணி தொடர்பான விரிவான திட்டம் தீட்டப்பட வேண்டும்.
மணிப்பூர் நிலவரம்- ஜூன்- 24ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!
ஆமை இனப்பெருக்க காலத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது. தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் மண் அரிப்பு, மண் திரட்சி உள்ளிட்டவைக் குறித்து கண்காணிக்க வேண்டும். ஏதேனும் தவறான, போலியான தகவல் இருப்பது தெரிய வந்தால் அனுமதி வாபஸ் பெறப்படும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.


