spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜிக்கு நேரு ஸ்டேடியத்திலா அறுவை சிகிச்சை செய்யமுடியும்?- மா.சு.

செந்தில் பாலாஜிக்கு நேரு ஸ்டேடியத்திலா அறுவை சிகிச்சை செய்யமுடியும்?- மா.சு.

-

- Advertisement -

செந்தில் பாலாஜிக்கு நேரு ஸ்டேடியத்திலா அறுவை சிகிச்சை செய்யமுடியும்?- மா.சு.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேரு ஸ்டேடியத்தில் வைத்தா அறுவை சிகிச்சை செய்யமுடியும்? என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பக்காவாக பிளான் போட்ட அமலாக்கத்துறை! படுத்துக்கொண்டு காலி செய்த செந்தில்பாலாஜி! பரபரப்பு பின்னணி
மருத்துவமனையில் செந்தில்பாலாஜி

செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சையில் வெளிப்படைத் தன்மை இல்லை என எழும் விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் விதமாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “செந்தில் பாலாஜிக்கு வெற்றிகரமாக சிகிச்சை நடைபெற்று முடிந்தது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்துவருகின்றனர். Open heart அறுவை சிகிச்சையை நேரு ஸ்டேடியத்தில் டேபிள் போட்டு, சுற்றி 15 ஆயிரம் பேரை உட்கார வைத்து செய்யணுமா? அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எத்தனை அடைப்புகள் இருந்தன, எது மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது என சந்தேகம் வருபவர்கள் மருத்துவமனை சென்று தெரிந்து கொள்ளலாம்.

நம்மை காக்கும் 48 திட்டத்தின் காரணமாக சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இந்த திட்டத்தின்மூலம் இதுவரை 1.67 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. வரும் நாட்களில் உயிரிழப்புகள் மேலும் குறையும். இத்திட்டத்திற்காக சுமார் ரூ.140 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

we-r-hiring

ma subramanian

தமிழ்நாடு முழுவதும் 103 இடங்களில் இன்று மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு முகாமிலும் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்ற எண்ணத்தில்தான், மதுரை எய்ம்ஸ் கல்லூரியை ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடத்தி ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறோம்” என்றார்.

MUST READ