spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமரக்காணம் அருகே அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 15 பேர் காயம்

மரக்காணம் அருகே அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 15 பேர் காயம்

-

- Advertisement -

மரக்காணம் அருகே அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 15 பேர் காயம்

மரக்காணம் அருகே சாலை ஓர பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயமடைந்தனர்.

மரக்காணம் அருகே அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 15 பேர் காயம்

நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு தமிழக அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை கும்பகோணத்தை சேர்ந்த நடராஜ் வயது (40) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதில் நாகப்பட்டினம், வேதாரண்யம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 27 பயணிகள் வந்துள்ளனர். இந்த பேருந்து கிழக்கு கடற்கரை சாலையில் மரக்காணம் அருகே தாழங்காடு என்ற இடத்தில் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 10 அடி ஆழமுள்ள சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. அப்போது அந்த பேருந்தில் தூக்கத்தில் வந்த பயணிகள் செய்வது அறியாமல் தங்கள் உயிரை காப்பாற்றும் படி சத்தம் போட்டு உள்ளனர்.

we-r-hiring

Government bus met with an accident in Thazhankadu | விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையோர
பள்ளத்தில் கவிழுந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

பயணிகளின் அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு ஓடி உள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மரக்காணம் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் உடனடியாக சம்பவத்திற்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை பொதுமக்களின் உதவியுடன் பத்திரமாக பேருந்து உள்ளே இருந்து வெளியில் அழைத்து வந்துள்ளனர். இந்த விபத்தில் பேருந்து நடத்துனர் ஸ்ரீராம் வயது (57) மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த சந்தியா வயசு (29) வேதாரணியம் பகுதியை சேர்ந்த பாபா செல்வம் வயது (35) நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த கார்த்திக வயது (25) சாதிக் வயது (40 )ராஜேந்திரன் வயது (50) உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை போலீசார் மரக்காணம் அரசு பொது மருத்துவமனை மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர்.

MUST READ