Homeசெய்திகள்சினிமாமெல்லிசை மன்னர் எஸ்.விஸ்வநாதன், கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் இன்று...... சுவாரஸ்ய தகவல்கள்!

மெல்லிசை மன்னர் எஸ்.விஸ்வநாதன், கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் இன்று…… சுவாரஸ்ய தகவல்கள்!

-

- Advertisement -

 

மெல்லிசை மன்னர் எஸ்.விஸ்வநாதன், கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் இன்று...... சுவாரஸ்ய தகவல்கள்!
File Photo

எத்தனையோ வெற்றிக் கூட்டணிகளைக் கண்ட, சரித்திரம் புகழ் பெற்றது தமிழ் சினிமா. அதில் ஒரு சில கலைஞர்கள் மட்டுமே, தங்களின் மறைவுக்கு பிறகும் மக்களின் மனதில் மறையாமல் நிலைத்திருப்பார்கள். அந்த பட்டியலில் இடம்பெற்ற முக்கிய கலைஞர்களான மெல்லிசை மன்னரும், கவியரசரும் என்றைக்கும் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளனர்.

we-r-hiring

தேவை இல்லாமல் குண்டர் சட்டத்தை பயன்படுத்தக்கூடாது- டிஜிபிக்கு கடிதம்

அந்த ஜாம்பவான்களின் பிறந்தநாள் இன்று. அவர்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

இசையும், அமுதும் ஒன்றாய் இனிப்பதைப் போல், அழகும், தமிழும் ஒருசேர கவர்வதைப் போல், திரைத்துறையில் பல சாதனைகளை நிகழ்த்துவதற்காக, ஒரே தினத்தில் பிறந்தவர்கள் தான், மெல்லிசை மன்னன் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் கவியரசு கண்ணதாசன். இது ஒரு அபூர்வ ஒற்றுமை.

ஒரே தினத்தில் பிறந்த இருவருக்கும் ஒரு வயதே வித்தியாசம். கவியரசு கண்ணதாசன் 1927- ஆம் ஆண்டும், எம்.எஸ்.விஸ்வநாதன் 1928- ஆம் ஆண்டும், இந்த உலகில் பயணத்தைத் தொடங்கினார்கள். வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் வரிகளாக மாற்றும் கண்ணதாசனும், அவரது இன்பத் தமிழ் வரிகளுக்கு இசையமைக்கும் எம்.எஸ்.விஸ்வநாதனும் இணைந்து தமிழ் சினிமாவுக்கு கொடுத்த பாட்டுச் சரங்கள் ஏராளம்.

செந்தில் பாலாஜிக்கு நேரு ஸ்டேடியத்திலா அறுவை சிகிச்சை செய்யமுடியும்?- மா.சு.

மனித உணர்வுகளை இசையாக வடிக்கும் வித்தகர் எம்.எஸ்.விஸ்வநாதன், தமிழ் தாய் வாழ்த்துப் பாடலுக்கு இசையமைத்தவர். சுமார் 1,700 படங்களுக்கு மேல் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். எழுத்தாலும், இசையாலும் இருகப் பிணைக்கப்பட்ட இந்த இருவரின் நட்பு அத்தனை ஆழமாக இருந்ததே இந்த கூட்டணி காலம் நிற்கும் பாடல்களை உருவாக காரணமாகியிருக்கிறது.

MUST READ