spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்”ஈபிஎஸ் வழிநடத்திய அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி”

”ஈபிஎஸ் வழிநடத்திய அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி”

-

- Advertisement -

எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியை காப்பாற்ற அனைவரும் கூடியுள்ளீர்கள் என ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒற்றை தலைமை சர்ச்சை வெடித்த பின்பாக கடந்த ஜூலை நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். கட்சியின் அதிருப்தியாளர்கள், எடப்பாடி தரப்பால் நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆகியோரை மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் என ஓ. பன்னீர்செல்வம் நியமித்துள்ளார். இதனிடையே பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அறிவித்திருந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், 88 மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

we-r-hiring

ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், “ வரலாற்று சிறப்புமிக்க ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை தாங்கும் வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. எம்.ஜி.ஆர். தொடங்கிய இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்றுதான் அனைவரும் இங்கு கூடி உள்ளனர். எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் ஆசி இங்கு உள்ளவர்களுக்குதான் உண்டு. அதிமுகவில் உள்ள இடைச்செருகல்களை அப்புறப்படுத்தி அதிமுக இயக்கத்தை காப்பாற்ற வேண்டும். இடைச்செருகல் என்றுதான் கூறினேன். எடப்பாடி என்று கூறவில்லை. உண்மையான அதிமுக நாங்கள் தான். எடப்பாடியிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் ஓபிஎஸ் தரப்பினரை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள தயார். தமிழ்நாட்டில் செய்ய வேண்டியது நிறைய உள்ளது, அதற்கான ஆற்றல் உடையவர் ஓபிஎஸ், ஜெயலலிதா முதல்வராவார், விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராவார் என கூறினேன், அது நடந்தது. ஈபிஎஸ் வழிநடத்திய அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி” எனக் கூறினார்.

MUST READ