- Advertisement -

அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தின் உணவுப் பட்டியல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசின் சமூக நலத்துறையின் முதன்மைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானியங்களைக் கொண்டு சமைத்த உணவுகளை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதிப் பரிவர்த்தனை அறிக்கை- வருமான வரித்துறை நோட்டீஸ்!
குறிப்பாக, உப்புமா, கிச்சடி, பொங்கல் உள்ளிட்ட உணவுப் பட்டியலில் சிறுதானிய உணவுகளைச் சேர்த்து வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரிசி ரவை, கோதுமை ரவை, சேமியா, சிறுதானியம், பருப்பு, காய்கறிகள் ஆகியவை அடங்கிய உணவு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.