spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகுடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து விளக்கமளித்த மணிப்பூர் ஆளுநர்!

குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து விளக்கமளித்த மணிப்பூர் ஆளுநர்!

-

- Advertisement -

 

குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து விளக்கமளித்த மணிப்பூர் ஆளுநர்!
Photo: President Of India

மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்து அம்மாநில ஆளுநர் அனுசூயா உய்கே விளக்கமளித்தார்.

we-r-hiring

ஹ்ரித்திக் ரோஷனின் ‘ஃபைட்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்!

வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரண்டு குழுக்களிடையே ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ந்து வன்முறை நீடித்து வருகிறது. அங்கு அமைதி திரும்ப வேண்டி, அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இதனிடையே, வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன், மணிப்பூர் நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநர் அனுசூயா உய்கே, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்துப் பேசினார்.

கிரைம் திரில்லராக உருவாகும் விஜய் ஆண்டனியின் ‘கொலை’……..படக்குழு வெளியிட்ட முக்கிய அப்டேட்!

அப்போது, மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் தற்போதைய சூழல், கலவரம், பாதுகாப்பு நடவடிக்கைகள், இயல்பு நிலைக்கு திரும்ப மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் உள்ளிட்டவைக் குறித்து குடியரசுத் தலைவரிடம் ஆளுநர் விரிவாக எடுத்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ