spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்இந்திய துணைத் தூதரகத்திற்கு தீ வைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய துணைத் தூதரகத்திற்கு தீ வைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

-

- Advertisement -

 

இந்திய துணைத் தூதரகத்திற்கு தீ வைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்!
Photo: ANI

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீ வைத்துள்ளனர். இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

we-r-hiring

பேனா நினைவுச் சின்னம்- வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

பஞ்சாப்பில் செயல்பட்டு வந்த காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு மீது மாநில காவல்துறையினர், கடந்த மார்ச் மாதம் கடும் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த அமைப்பின் தலைவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனையடுத்து, அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மீது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரக வளாகத்திற்குள் நுழைந்த காலிஸ்தான் பிரிவினைவாதிகள் காலிஸ்தான் கொடியையும் ஏற்றினர். பின்னர், அந்த கொடி அகற்றப்பட்டது.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளிடம் இந்திய தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தது. இந்த சூழலில் தற்போது, சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீ வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக, காலிஸ்தான் ஆதரவாளர்களே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஊழியர்கள் யாரும் காயமடையவில்லை. இதனிடையே, இந்திய துணைத் தூதரகம் மீதான தாக்குதலுக்கு அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம்!

எனினும், தீ விபத்து குறித்து தகவலறிந்த சான் பிரான்சிஸ்கோ தீயணைப்பு நிலையத்தின் வீரர்கள், விரைந்து சென்று தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்ததால், பெரும் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

MUST READ