spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

-

- Advertisement -

 

அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!
Photo: AIADMK

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (ஜூலை 05) காலை 09.30 மணிக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

we-r-hiring

31,008 பள்ளிகளுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!

இந்த கூட்டத்தில், அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் பணிகள், உறுப்பினர் சேர்க்கை, அ.தி.மு.க.வின் மாநில மாநாடு, கட்சியின் வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்டவைக் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரையரங்குகளுக்கான டிக்கெட் கட்டணத்தை உயர்த்தக் கோரிக்கை!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிப்பது உள்ளிட்டவைக் குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு கட்சியின் மாநாட்டிற்கான இலட்சியினை எடப்பாடி பழனிசாமி வெளியிடவுள்ளார்.

MUST READ