திமுக ஆட்சி அமைய காரணம் டெல்டா மாவட்டங்கள்தான்- உதயநிதி ஸ்டாலின்
தஞ்சாவூர் எனக்கு நெருக்கமான மாவட்டம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2021 சட்டமன்ற தேர்தலில் 95 சதவிகித வெற்றியை கொடுத்து தி.மு.க ஆட்சி அமைய காரணமாக இருந்தது டெல்டா மாவட்டங்கள் தான், அதே போல், வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றுத்தர வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சை அம்மாபேட்டை ஒன்றிய திமுக செயலாளர் தியாக.சுரேஷ் இல்ல திருமண விழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், “2021-ல் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது டெல்டா மாவட்டம் தான். 95 சதவீத வெற்றியை தந்து திமுக ஆட்சி அமைய காரணமாக இருந்ததைப் போல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை பெற்று தரவேண்டும். தஞ்சை மாவட்டம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தேர்தலில் நின்று வென்ற தொகுதி என்பதால் எனக்கு மிக நெருக்கமான தொகுதி தஞ்சை” என தெரிவித்தார்.