spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபழனியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது

பழனியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது

-

- Advertisement -

பழனியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது

பழனியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை திருடன் முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

ஏடிஎம்

பழனி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தபால் நிலையம் அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கியின் வாசலில் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது‌. இந்நிலையில் நேற்று இரவு 2 மணியளவில் ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டுள்ள இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க மர்மநபர் முயன்றுள்ளார். அப்போது இயந்திரத்தை உடைக்க முயன்றபோது அலாரம் அடித்துள்ளது‌. தொடர்ந்து உடைக்க முடியாததால் கொள்ளையன் வேகமாக வெளியேறினர்.

we-r-hiring

இதையடுத்து அலாரம் அடித்து வங்கி மேலாளருக்கு குறுஞ்செய்தி சென்றதை அடுத்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து குற்றவாளியை போலீசார் தேடி வந்தனர். பழனி ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக படுத்திருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்தது. இந்தியன் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த நபர் என்பது தெரியவந்தது.

பழனி

அதனைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர், தென்காசி மாவட்டம் புளியங்குடி சேர்ந்த சூரியகாந்தி என்பதும் நேற்று இரவு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றதும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து சூரியகாந்தியை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

MUST READ