spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்குழந்தையின்மையால் கணவர் அடித்து துன்புறுத்தியதால் மனைவி தற்கொலை

குழந்தையின்மையால் கணவர் அடித்து துன்புறுத்தியதால் மனைவி தற்கொலை

-

- Advertisement -

குழந்தையின்மையால் கணவர் அடித்து துன்புறுத்தியதால் மனைவி தற்கொலை

புதுச்சேரி அருகே குழந்தை இன்மையால் கணவன் அடித்து மிரட்டியதால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி திருக்கனூரை அடுத்த மணவெளி ரோஜா நகர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த். இவர் தனது அத்தை மகளான மோனிகா (23)வை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இருவருக்கும் குழந்தை இல்லை. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

we-r-hiring

கடந்த 26 ம் தேதி மோனிகாவை செல்போனில் அவரது பெற்றோர் பலமுறை தொடர்பு கொண்டும் அவர் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நேரில் சென்று பார்த்த போது கதவு மூடி இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவர திருக்கனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுகாக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.மேலும் மோனிகாவின் செல்போனை ஆய்வு போது தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக அவர் இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார்.

அதில் தன்னை தனது கணவர் அரவிந்த் குழந்தை இல்லை என்பதற்கு தன்னை தலையில் அடித்ததாகவும், வேறு பெண்ணை திருமணம் செய்து குழந்தை பெற்று கொள்வேன் என கூறி அடித்ததாகவும் மிரட்டியுள்ளார். மேலும் அவர் கைப்பட எழுதியுள்ள கடிதத்தில் தன்னுடைய இறப்புக்கு கணவர் மாமியார், மாமனார் மற்றும் கணவரின் தம்பி என குறிப்பிட்டுள்ளார். குழந்தை இல்லாத காட்டி அடித்ததாகவும், வரதட்சனை கேட்டு இவர்கள் கொடுமைப்படுத்தியதாகவும் இவர்கள் யாரையும் சும்மா விடக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் திருக்கனூர் போலீசார் கணவர் அரவிந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன

MUST READ