Homeசெய்திகள்தமிழ்நாடுசட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமர்வார்- அப்பாவு

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமர்வார்- அப்பாவு

-

- Advertisement -

2023- ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

we-r-hiring

சென்னை தலைமைச் செயலகத்தில் 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் குறித்து சபாநாயகர் மு.அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், “2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 9ம் தேதி ஆளுநர் உரையுடன் காலை 10 மணிக்கு தொடங்குகிறது.அன்றைய தினமே அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு எத்தனை நாட்கள் கூட்டத்தை நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும். அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக கடந்த கூட்டத்தொடரின் போது அவர்களுக்கு குறிப்பு உரை வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இரு தரப்பில் இருந்தும் எவ்வித தகவலும் வரவில்லை. அதனால் எதிர்கட்சித் துணைத்தலைவர் இருக்கையை பொறுத்தவரை இதற்கு முந்தைய எதிர்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் நீடிப்பது தொடரும். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமர்வார்.

அண்மையில் கொரோனா தொற்று பரவல் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ள படி அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்கிற வழிகாட்டுதல் பின்பற்றப்படும். சட்டமன்ற கூட்டத்துடன் நடைபெறும் பொழுது சட்டமன்ற உறுப்பினர்கள் முக கவசம் அணியலாம் கட்டாயம் கிடையாது. புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோருக்கு இடையே இருக்கை ஒதுக்கபட்டுள்ளது” என தெரிவித்தார்.

MUST READ