அதிமுகவில் எந்த சூழலிலும் ஓபிஎஸ் அணியினரை இணைக்க கூடாது என மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.

சென்னை ராயப்பேட்டை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைப்புச்செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ள தலைமை அலுவலகம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அசம்பாவிதமும் ஏற்பட கூடாது என்பதற்காக காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவில் ஓபிஎஸ் அணியினரை இணைக்கக்கூடாது. அதிமுக தலைமையில் தான் மெகா கூட்டணி. அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் உறுதியாக இருந்தால் எதிரிகளை வீழ்த்துவது எளிது. மக்களவை தேர்தலுக்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும். கூட்டணி பேச்சுவார்த்தைகளை தலைமை பார்த்துக்கொள்ளும். அதிமுக தலைமையிதான் மெகா கூட்டணி என்பதியில் உறுதியாக உள்ளேன். சட்டப் போராட்டங்கள் குறித்து கவலைக் கொள்ளாமல் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்துங்கள். வாக்குச்சாவடி அளவில் கட்சியை பலப்படுத்த வேண்டும். திமுக குற்றச்சாட்டுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்காமல் மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும்” என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.