Homeசெய்திகள்தமிழ்நாடுபுத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடா?- அமைச்சர் மா.சு

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடா?- அமைச்சர் மா.சு

-

- Advertisement -

தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கொரோனாவை எதிர்கொள்ள தமிழகம் தயாராகிவருகிறது. தமிழ்நாட்டில் புத்தாண்டு, சமய விழாக்கள், அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகள் என எதற்கும் கட்டுப்பாடுகள் இல்லை. பொதுமக்கள் சுய கட்டுப்பாட்டுடன் விதிகளை பின்பற்ற வேண்டும், தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் 1.75 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன, 1,954 டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. கடந்த 20 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 10க்கும் கீழ்தான் உள்ளது. நேற்று 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

கொரோனாவை எதிர்கொள்ள மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 51 மட்டுமே. இருப்பினும் மருத்துவமனைகளில் உள்ள வசதிகளை 24 மணிநேரத்திற்குள் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளோம். கொரோனா கட்டமைப்பு 2 நாட்களுக்குள் உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட அதிகாரிகள் மருத்துவமனைகளில் ஆய்வு செய்யவெண்டும். தமிழகத்தில் திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் துவங்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

MUST READ