spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாராகுல்காந்தி எனக்கு Flying Kiss கொடுத்தார்- ஸ்மிருதி இராணி

ராகுல்காந்தி எனக்கு Flying Kiss கொடுத்தார்- ஸ்மிருதி இராணி

-

- Advertisement -

ராகுல்காந்தி எனக்கு Flying Kiss கொடுத்தார்- ஸ்மிருதி இராணி

ஊழலைப் பற்றி பேசும்போது உங்களது கூட்டணியில் இருக்கும் திமுகவை பாருங்கள் என ராகுல் காந்தி பேச்சுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பதிலடி கொடுத்துள்ளார்.

Image

ராகுல்காந்தியின் பேச்சுக்கு பதிலளித்த ஸ்மிருதி இராணி, “இன்று மிக மோசமான ஒரு பேச்சை, ராகுல்காந்தி பேச்சை நாம் இங்கு கேட்டோம். அதற்கு நான் எனது கண்டனங்களை தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் இந்தியா கிடையாது. நீங்கள் ஊழல்வாதிகள், ஊழலை கண்டுபிடித்தவர்கள். மணிப்பூர் மாநிலம் உடையவில்லை. மணிப்பூர் மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதியாக தான் இப்போதும் இருக்கிறது. ஊழலைப் பற்றி பேசும்போது உங்களின் கூட்டணியில் கூடவே இருக்கும் தமிழ்நாட்டின் திமுக கட்சியையும் பாருங்கள். மணிப்பூர் தொடர்பாக விவாதிக்க தயாராக இருந்தபோது, எதிர்கட்சியினர் விவாதிக்காமல் ஓடிவிட்டனர்.

we-r-hiring

ஸ்மிருதி இராணி

பாரத் மாதாவை கொலை செய்து விட்டீர்கள் என பேசும் ராகுல்காந்தி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பண்டீட்டுகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு அவர்களுக்கு எப்போது நீதி வழங்குவீர்கள்? காஷ்மீரில் பிரச்சனை இருந்தபோது காங்கிரஸ் பிரதமர்கள் யார் நேரில் சென்றனர். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் காஷ்மீரில் அமைதி ஏற்பட்டது. ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் இன்று அவை விட்டு வெளியேறும் போது தனக்கு “Flying Kiss” கொடுத்தார்.” என்றார்.

MUST READ