Homeசெய்திகள்தமிழ்நாடுஆதி திராவிட சமூகத்தினர் வீட்டில் விருந்து சாப்பிட்ட ஜேபி நட்டா

ஆதி திராவிட சமூகத்தினர் வீட்டில் விருந்து சாப்பிட்ட ஜேபி நட்டா

-

- Advertisement -

கோவை மாவட்டம், அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையம் கிராமத்தில் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த மூர்த்தி, விஜயா தம்பதியினரின் வீட்டில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உணவருந்தினார்.

Image
மூர்த்தி- விஜயா தம்பதியினரின் வீட்டுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மத்திய தகவல் தொலைதொடர்பு இணை அமைச்சர் எல் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகளும் சென்றிருந்தனர். அப்போது அவர்களை மலர் தூவி வரவேற்ற மக்கள், தாங்கள் சமைத்த உணவுகளை அன்போடு பரிமாறினர். பருப்பு, வடை, பாசிப்பயிறு, கருப்பு சுண்டல், பஜ்ஜி உள்ளிட்ட ஆறு வகை உணவுகளை மூர்த்தி குடும்பத்தினர் ஜேபி நட்டா குடும்பத்திற்கு வழங்கினர். ஆனால் ஜேபி நட்டா இரண்டு வகை உணவுகளை மட்டுமே சாப்பிட்டார்.

we-r-hiring

இதனிடையே இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “அன்னூர் ஒன்றியம் பாஜக கிளைத் தலைவர் திரு மூர்த்தி அவர்களும் அவரது குடும்பத்தினரும் நமது தேசியத் தலைவர் திரு ஜேபி நட்டா அவர்களை சிறப்பான முறையில் வரவேற்று தங்கள் இல்லத்தில் இன்று அன்புடன் உபசரித்தனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ