Homeசெய்திகள்தமிழ்நாடுபொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

-

- Advertisement -

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்தும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5,000 வழங்க வலியுறுத்தியும் அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

eps

we-r-hiring

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழக அரசு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சை அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வந்தது.

இந்நிலையில் எதிர்வரும் பொங்கல் பண்டிகைக்கு, ஆயிரம் ரூபாயுடன், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு, டிசம்பர் 22ம் தேதி அறிவித்தது.

ஜனவரி முதல் வாரத்தில் இருந்து வினியோகிக்கப்பட உள்ள இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. அதிமுக விவசாய பிரிவு சார்பில் திருவண்ணாமலையில் வரும் ஜன.2ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5,000 வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ