ஒன்றிய அரசு மீண்டும் கொண்டுவர திட்டமிட்டுள்ள டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வலுவிழந்துவிடும் என ஆர்.டி.ஐ. அலுவலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.


உலகின் அதிக அளவுலான இணையதள பயன்பாடு கொண்ட நாடாக இந்தியா மாறி உள்ளது. பிற நாடுகளைப் போல இணையதள பயன்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் இல்லாமல் இந்தியாவில் அனைவரும் அணுகும் வகையில் இருப்பதால் ஆபத்துகளுக்கும் அளவு இல்லை.
பொதுத்தளத்தில் அதிகரித்திருக்கும் தரவுகளை முறையாக கையாளும் நோக்கில் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2022 ன் வரைவு ஒன்றிய மின்னணு தகவல் துறை கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்த மசோதா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்தப் போகச் செய்யும் என ஆர்.டி.ஐ. ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மூன்று முக்கியமான பிரச்சனைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
1. இந்த சட்ட முன்வரைவு தமிழிலேயே இல்லை.
2. இது இணையதளம் வழியாக மட்டுமே இந்த கருத்துக்களை கொடுக்க முடியும் என்பதால் இதில் ஒரு ரகசிய தன்மை இருப்பதாக கருதவில்லை.
3. ஆர்.டி.ஐ. சட்டத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை இவர்கள் வந்து செய்ய முனைகிறார்கள். தனிப்பட்ட நபர்களின் தகவல்களாக இருந்தாலே தரத் தேவையில்லை என்று சட்டத்திருத்தம் கொண்டு வரமுயல்கிறது.
கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் மிக முக்கியமானதாக கருதப்பட்டது. ஆனால் பாஜக அரசு பொறுப்பேற்று பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு முதலே ஆர்.டி.ஐ. சட்டத்தை வலுவிழக்க செய்யும் நடவடிக்கைகள் தொடங்கி விட்டதாகவும் தற்போது அடுத்த கட்ட நகர்வு ஆரம்பித்திருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய மசோதா என்னவென்றால் தனிநபர்களினுடைய நீங்கள் தகவல்களை கோர உங்களுக்கு உரிமை இல்லை. அரசாங்க ஊழியர்களைப் பற்றி யாரும் கேள்வி கேட்கக்கூடாது. அவர்களுடைய சொத்து கணக்கை கேட்கக்கூடாது. அவர்களுடைய வாகனங்களின் கணக்குகளை கேட்கக்கூடாது. அவர்களுடைய கோப்புகள் மற்றும் அந்த துறையைச் சார்ந்த கோப்புகள், டெண்டர் டாக்குமெண்டாக இருந்தாலும் சரி அல்லது கேள்வித்தாள், விடைத்தாளாகா இருந்தாலும் சரி எதையுமே நீங்கள் கேக்க கூடாது என்பதே இதன் நோக்கமாக உள்ளது என்று கூறப்படுகிறது.
டிஜிட்டல் தலங்களில் தனிநபர்களின் தகவல் பாதுகாப்பு எனக் கூறி ஒன்றிய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவை அறிமுகம் செய்தது. இதில் சில சட்டப்பிரிவுகள் தனிநபர் தகவல் பாதுகாப்பிற்கும் கருத்து சுதந்திரத்திற்கும் தடையாக இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியதால் இம்மசோதா திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் ஒன்றை வருஷம் மீண்டும் புதிய வரைவை அறிவித்துள்ளது. பலருக்கு பயன் தரும் ஆர்.டி.ஐ. சட்டத்தையும் வலுவிழக்கச்செய்யும் ஒன்றிய அரசு முயற்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணைக்க வேண்டும் என்பதை சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.


