spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமதுராந்தகம் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த கார்- 3 பேர் பலி

மதுராந்தகம் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த கார்- 3 பேர் பலி

-

- Advertisement -

மதுராந்தகம் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த கார்- 3 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகத்தில் சென்ற கார், நிலைத்தடுமாறு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

Image

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அய்யனார் கோவில் என்ற இடத்தில் திண்டுக்கல்லில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் இன்று காலை ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 20 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த மூன்று ஆண்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதனை அடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த மதுராந்தகம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

we-r-hiring

மதுராந்தகம் அருகே கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் விசாரணையில் விபத்தில் உயிரிழந்தவர்கள் கதிரவன், கார்த்திக், நந்தகுமார் ஆகிய மூவர் எனவும் சென்னை ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்வதற்காக சென்றபோது இந்த கோர விபத்து நடைபெற்றுள்ளதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளத்தில் கவிழ்ந்த காரை மீட்கும் பணி நடைபெற்றுவருகிறது.

MUST READ