spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாராணுவ வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து- 9 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

ராணுவ வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து- 9 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

-

- Advertisement -

 

ராணுவ வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து- 9 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!
File Photo

லடாக்கில் ராணுவ வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 ராணுவ வீரர் உயிரிழந்தனர்.

we-r-hiring

தளபதி விஜய்… தல அஜித்… சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான்… கலகலப்பாக பதிலளித்த சத்யராஜ்!

லடாக்கின் லே பகுதியில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் உள்ள கியாரி என்ற இடத்தில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. ராணுவ வாகனம் தரையில் சறுக்கிய போது, நிலைத்தடுமாறி ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வாகனத்தில் ஒரு ராணுவ உயரதிகாரி உள்பட மொத்தம் 10 பேர் பயணித்த நிலையில், 9 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், லடாக்கில் நடந்த சாலை விபத்தில் ராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. சாலை விபத்தில் காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தேம்பி தேம்பி அழுது வீடியோ வெளியிட்டுள்ள பிரபல தெலுங்கு நடிகை!

அதேபோல், பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “லடாக்கில் லே பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 9 ராணுவ வீரர்கள் இறந்தது வருத்தமளிக்கிறது. விபத்தில் காயமடைந்த ராணுவ வீரர்கள் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ராணுவ வீரர்கள் தேசத்திற்கு ஆற்றிய பணியை எப்போதும் நினைவுக் கூரப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ