spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாசமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம், தமிழ் புறக்கணிப்பு....? - ஒன்றிய அரசு

சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம், தமிழ் புறக்கணிப்பு….? – ஒன்றிய அரசு

-

- Advertisement -

கடந்த 8 ஆண்டுகளில் சமஸ்கிருதத்திற்கு 148 ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் தமிழ் மொழிக்கு வெறும் 74 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்துகிறது 8 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் தமிழை விட சமஸ்கிருதத்திற்கு கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கி வருகிறது.

we-r-hiring

தமிழை வளர்ப்பதற்காக சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மையத்துக்கு 8 ஆண்டுகளில் ரூ.74 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதம், பாலி, பிராகிருத மொழிகளை வளர்க்க டெல்லியில் உள்ள சமஸ்கிருத பல்கலை.க்கு 8 ஆண்டுகளில் ரூ. 1488 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 2019 – 2020-ல் சமஸ்கிருத வளர்ச்சிக்காக ரூ. 247 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2019 – 2020-ல் தமிழ் வளர்ச்சிக்காக ரூ. 10 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது மோடி அரசு.

கடந்த எட்டு ஆண்டுகளில் தமிழ் வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு ஒதுக்கிய ஒட்டுமொத்த தொகை ஓராண்டு சமஸ்கிருத வளர்ச்சிக்கான நிதியை விட குறைவு எனவும் இந்தி சமஸ்கிருதத்துக்கு ஒன்றிய அரசு முக்கியத்துவம் தருவதாக குற்றச்சாட்டப்படும் நிலையில் நிதி ஒதுக்கீடு அதனை அம்பலப்படுத்தியுள்ளது. வெறும் 16,000 பேர் மட்டுமே பேசக்கூடிய சமஸ்கிருத மொழிக்கு ரூ. 1488 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த எட்டு ஆண்டுகளில் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூபாய் 148 கோடியும் தமிழ் வளர்ச்சிக்கு வெறும் ரூபாய் 74 கோடியும் ஒன்றிய அரசு ஒதுக்கியது அம்பலம்

செம்மொழி செம்மொழிகளான தமிழ், சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை குறித்து கரூர் எம்.பி. ஜோதிமணி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்துள்ள கல்வி அமைச்சர் சுபாஷ் சர்க்கார் நிதி ஒதுக்கீடு விவரங்கள் இடம்பெற்றுள்ளன என்றார்.

கடந்த 8 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் தமிழை விட சமஸ்கிருதத்திற்கு கூடுதல் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது.

 

MUST READ