Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுக முன்னாள் எம்பி மஸ்தான் கொலை- 5 பேர் கைது

திமுக முன்னாள் எம்பி மஸ்தான் கொலை- 5 பேர் கைது

-

- Advertisement -

சென்னை அருகே முன்னாள் எம்பி மஸ்தான் உயிரிழந்த வழக்கில் அவரது கார் ஓட்டுநர் உட்பட 5 பேர் கைது செய்துள்ளனர்.

Image

we-r-hiring

சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்தவர் மஸ்தான் தஸ்தகீர் (66). இவர் அதிமுகவில் கடந்த 1995-முதல் 2001-வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்து வந்தார். இதனிடையே கட்சியில் இருந்து விலகிய அவர் திமுகவில் இணைந்து மாநில சிறுபான்மையினர் நல செயலாளராக இருந்து வந்தார். இவர் கடந்த 22 ஆம் தேதி அவரது வீட்டில் இருந்து திருச்சி நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார இவரது காரை அவரது உறவினரான இம்ரான் என்பவர் ஓட்டி வந்துள்ளார் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே பழவேலி அருகே வந்த போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அவர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் மஸ்தானின் கார் ஓட்டுநர் இம்ரான் உள்ளிட்ட 5-பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ