சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வெள்ளாளப்பட்டி ஊராட்சியில் சின்னப்பன் (வயது 52) என்ற விவசாயிக்கு உடல் அரிப்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அருகில் உள்ள வெள்ளாளப்பட்டியில் உள்ள அம்மன் மெடிக்கலில் சென்று ஊசி போட்டதாக கூறப்படுகிறது. ஊசி போட்டு வெளியில் வரும் போது சின்னப்பன் மயங்கி விழுந்துள்ளார்.

உடனே அருகில் உள்ளவர்கள் 108 வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்து போது அவர் இறந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த மெடிக்கலில் உள்ள நபர் பூபதி (40) என்ற நபர் முறையாக மருத்துவம் படிக்காத நிலையில் வைத்தியம் பார்ப்பதாகவும், அந்த ஊர் மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். இதேபோல் தொடர்ந்து உயிரிழப்பு இப்பகுதியில் நடந்து வருவதாகவும், சின்னப்பன் ஊசி போட்ட உடனடியாக உயிரிழந்ததாகவும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த மெடிக்கல் முன்பு திரண்டதால் அங்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு நிலவியது.
மேலும் வாழப்பாடி கருமந்துறை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூபதி என்ற நபர் மெடிக்கல் வைத்து வைத்தியம் பார்த்து வருவதாகவும், இவர் சின்னப்பன் இறந்ததை அறிந்து மெடிக்கல் சாத்திவிட்டு தப்பி ஓடி உள்ளதாகவும் கூறியுள்ளனர்.