Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரன் ரூ.41,000-ஐ தாண்டியது

தங்கம் விலை சவரன் ரூ.41,000-ஐ தாண்டியது

-

- Advertisement -

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து 41 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

gold jewellery

we-r-hiring

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் கார்த்திகை மாதம் நிறைவடைந்து மார்கழி மாதம் தொடங்கியுள்ளது.சுப நிகழ்ச்சிகள் ஏதும் இல்லை என்ற போதிலும் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதற்கு கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியதே காரணம் என தெரிவிகிறது. கடந்த 21 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் 41 ஆயிரத்தை நெருங்கிய நிலையில், அதன்பின் குறைய தொடங்கியது. ஆனால் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் தற்போதைய சூழலில் ஒரு சவரன் தங்கம் 41 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.41,040 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து ரூ. 5,130-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 20 காசுகள் குறைந்து ரூ.74.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 200 ரூபாய் குறைந்து ரூ.74,300 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

MUST READ