Homeசெய்திகள்இந்தியா"தமிழகம் தேவையற்றத் தொல்லைத் தருகிறது"- முதலமைச்சர் சித்தராமையா சர்ச்சை கருத்து!

“தமிழகம் தேவையற்றத் தொல்லைத் தருகிறது”- முதலமைச்சர் சித்தராமையா சர்ச்சை கருத்து!

-

- Advertisement -

 

முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு....கர்நாடக மக்கள் மகிழ்ச்சி!
Photo: ANI

தமிழகம் தேவையற்றத் தொல்லைத் தருவதாக கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையாவின் கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

we-r-hiring

228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபாரம்!

தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என அதிகாரிகளிடம் முறையிடவும், டெல்லியில் இன்று (செப்.12) நடைபெறும் காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் முறையிடவும் கர்நாடக அரசு முடிவுச் செய்துள்ளது.

கடந்த முறை நடந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு வினாடிக்கு 5,000 கனஅடி தண்ணீரைத் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரைச் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இன்று (செப்.12) காலை 10.00 மணிக்கு மைசூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, “மேகதாது விவகாரத்தில் தேவையற்ற தொல்லைகளை தமிழகம் தருகிறது. மேகதாது திட்டத்தை எதிர்ப்பதற்கு தமிழகத்திற்கு எவ்வித காரணமும் இல்லை. கர்நாடகா மாநிலத்துக்கு உட்பட்டப் பகுதியிலேயே அணைக் கட்டப்படுகிறது.

இந்தியா- பாகிஸ்தான் போட்டி மழையால் ஒத்திவைப்பு!

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி தராமல் தாமதம் செய்கிறது. ஆகஸ்ட் மாதம் இறுதி வரை 86 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும், ஆனால் பாதியளவுக் கூட நாங்கள் திறக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ