Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மழையால் ஒத்திவைப்பு!

இந்தியா- பாகிஸ்தான் போட்டி மழையால் ஒத்திவைப்பு!

-

- Advertisement -

 

இந்தியா- பாகிஸ்தான் போட்டி மழையால் ஒத்திவைப்பு!
Photo: ICC

மழைக் காரணமாக, இந்தியா- பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி, இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

திருநின்றவூரில் 26-ஆம் ஆண்டு கராத்தே போட்டி- வெற்றியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் சா.மு நாசர் பரிசுகள் வழங்கினார்

ஆசியக் கிரிக்கெட் கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கொழும்பில் உள்ள பிரேமதாச மைதானத்தில் நேற்று (செப்.10) பிற்பகல் 03.00 மணியளவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் வீரர் கே.எல்.ராகுல் களமிறக்கப்பட்டு, ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டார்.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வுச் செய்தது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். கேப்டன் ரோஹித் சர்மா 56 ரன்களிலும், சுப்மன் கில் 58 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

மதுரவாயல் : டெங்கு காய்ச்சலால் 4வயது சிறுவன் உயிரிழப்பு

இதனையடுத்து, விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் நிதானமாக ஆடினர். 24.1 ஓவரில் 141 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிடவே ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் மீண்டும் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இந்த போட்டி இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மதுரவாயல் : டெங்கு காய்ச்சலால் 4வயது சிறுவன் உயிரிழப்பு

ஆட்டம் கைவிடப்பட்ட 24.1 ஓவரில் இருந்து மீண்டும் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ