
ஆசியக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. விராட் கோலி, கே.எல்.ராகுல் சதம் விளாசிய நிலையில், குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
கார்த்திக் சுப்புராஜின் அடுத்த சம்பவம்…. ‘ஜிகர்தண்டா 2’ டீசர் வெளியீடு!
இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள பிரேமதாஸா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுலின் சிறப்பான ஆட்டத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 356 ரன்களைக் குவித்தது.
ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கிய போட்டியில் இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்த போது மழைக் குறுக்கிட்டதால் ஆட்டம் அடுத்த நாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. திங்களன்றும் மழையின் காரணமாக, ஆட்டம் தாமதமாகவே தொடங்கியது.
களத்தில் இருந்த இந்திய அணியின் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் வெகு சிறப்பாக ஆடி, ரன் விகிதம் எப்போதும் ஆறுக்கு மேல் இருக்குமாறு பார்த்துக் கொண்டனர். பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சினை நாலாபுறமும் சிதறடித்த இருவரும், சதமடித்து ரசிகர்களை மகிழச் செய்தனர்.
94 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி, 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உட்பட உதவியுடன் 122 ரன்களுடனும், 106 பந்துகளை எதிர்கொண்ட கே.எல்.ராகுல் 12 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உதவியுடன் 111 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தொடர்ந்து 357 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடத் தொடங்கிய பாகிஸ்தான் அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. பும்ரா, ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்த, பின் வரிசை ஆட்டக்காரர்கள் ஐந்து பேரை தனது சுழலில் சிக்க வைத்தார் குல்தீப் யாதவ்.
ஏஆர் ரகுமானுக்கு ஆதரவாக நிற்கிறேன்… யுவன் ஷங்கர் ராஜா அறிக்கை!
இதனால் 32 ஓவர்களில் 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. இதன் காரணமாக, சுமார் 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி. விராட் கோலி ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.