Homeசெய்திகள்தமிழ்நாடுஇடைத்தரகர் இன்றி அரசே கரும்பை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

இடைத்தரகர் இன்றி அரசே கரும்பை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

-

- Advertisement -

தை பொங்கலை முன்னிட்டு திண்டுக்கல் சுற்று வட்டார பகுதிகளில் கரும்பு விளைச்சல் அமோகமாக நடைபெற்றுள்ள நிலையில் இடைத் தரகர்கள் இன்றி அரசு அதிகாரிகளே விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரும்பு

we-r-hiring

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் வருகின்ற ஜனவரி 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது நினைவிலும் வருவது கரும்பு தான். மாசி மாதம் நடவு செய்து மார்கழி கடைசியில் கரும்பு அறுவடைக்கு தயாராக இருக்கும். அதன்படி திண்டுக்கல்லை சுற்றியுள்ள செட்டிநாயக்கன்பட்டி, கள்ளிப்பட்டி, மறவப்பட்டி, வேடசந்தூர், வடமதுரை, இராஜக்காபட்டி, கே. புதுக்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.

அதேபோல் இந்த வருடம் தொடர்ந்து மழை பெய்ததின் காரணமாக கரும்பு விளைச்சல் அதிக அளவில் உள்ளது. தற்பொழுது கரும்பில் மாவு பூச்சி தாக்குதல், முயல் தொல்லை, ஆட்கள் பற்றாக்குறை, மற்றும் உரம் விலை உயர்வு காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர், தற்பொழுது அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் முழு கரும்பு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தனியார் மூலமாக கரும்பு விலை வாங்காமல் நேரடியாக விவசாயிகள் இடம் அரசு அதிகாரிகள் கரும்பை கொள்முதல் செய்ய வேண்டுன், அப்பொழுதுதான் விவசாயிக்கு உரிய விலை கிடைக்கும் என்பது விவசாயிகளின் கோரிக்கை.

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கரும்பு பயிர் செய்த விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்ட நிலையில் இந்த வருடம் 12 கரும்பு கொண்ட ஒரு கட்டுக்கு குறைந்த பட்சம் 700ரூபாய்க்கு விற்பனை செய்தால் மட்டுமே தங்களுக்கு விலை கட்டுப்படியாகும் என விவசாயிகள் தெரிவித்தனர். ஆகவே தமிழக அரசு பொங்கல் தொகுப்பிற்கு வழங்கக்கூடிய கரும்பை நேரடியாக விவசாயிகளிடமிருந்து இந்த வருடம் கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

MUST READ