spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"ஆவின் நெய் விலை உயர்வை கைவிடுக"-அண்ணாமலை ட்வீட்!

“ஆவின் நெய் விலை உயர்வை கைவிடுக”-அண்ணாமலை ட்வீட்!

-

- Advertisement -

 

"தமிழகத்தில் கள்ளச்சாராய ஆறு ஓடுகிறது"- அண்ணாமலை பேட்டி!
Photo: Annamalai Twitter Page

ஆவின் பால் பொருட்கள் விலையை மீண்டும் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியது அதிர்ச்சியளிக்கிறது என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

we-r-hiring

நிபா வைரஸ் எதிரொலி- கேரளாவில் விடுமுறை அறிவிப்பு

இது குறித்து பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “மக்கள் விரோத தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கடுமையான விலையுயர்வை மக்கள் தலையில் சுமத்துவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழக அரசு நிறுவனமான ஆவின் பால் பொருள்கள் விலையை, மீண்டும் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தி பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூபாய் 70 முதல் ரூபாய் 100 வரை அதிகமாகவும், வெண்ணெய் விலை கிலோவுக்கு ரூபாய் 30 முதல் ரூபாய் 50 வரையிலும் உயர்த்தி, சுற்றறிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்த விலை உயர்வு இன்று (செப்.14) முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் பொருள்களின் இந்த விலையுயர்வு, தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கும்.

“சனாதனிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

கடந்த 2022- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5- ஆம் தேதி, பால் கொள்முதல் விலையை ரூபாய் 3 மட்டும் உயர்த்திவிட்டு, ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளில் பால் பொருள்கள் விலையை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது தி.மு.க. அரசு. பால் உற்பத்தியாளர்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காமல், ஆவின் நிறுவன பால் பொருள்கள் விற்பனை விலையை மட்டும் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியிருப்பது, தனியார் பால் நிறுவனங்களை வளர்க்க, ஆவின் நிறுவனத்தையே அழித்து விட வேண்டும் என்று தி.மு.க. முடிவு செய்துள்ளதாகத்தான் தெரிகிறது

இன்னும் சில நாட்களில், தீபாவளி உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் வரவிருக்கின்றன. பால் பொருள்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஆவின் பால் பொருள்கள் விலையை உயர்த்தியிருப்பது, தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாகத்தான் அமையும்.

“சனாதனிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

உடனடியாக, பொதுமக்களைப் பாதிக்கும் இந்த விலையுயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், ஆவின் பால் நிறுவனத்தை முடக்கும் முயற்சிகளை, மக்கள் விரோத தி.மு.க. அரசு கைவிட வேண்டும் என்றும், தமிழ்நாடு பா.ஜ.க. சார்பாக வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ