
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார்.

ஐ.சி.சி. ஒருநாள் போட்டி தரவரிசை வெளியீடு!
சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரை வாபஸ் பெறுவதாக நடிகை விஜயலட்சுமி எழுத்துப்பூர்வமாக மனு அளித்துள்ளார். தன்னை திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் கூறியிருந்தார்.
அதேபோல், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வலியுறுத்தியும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார் நடிகை விஜயலட்சுமி. அதில், சீமான் தன்னை ஏமாற்றியதாகவும், தனக்கு கருக்கலைப்புச் செய்ததாகவும் அவர் புகார் கூறியிருந்தார்.
இதையடுத்து, சீமான் மீது ஐந்து பிரிவுகளில் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவுச் செய்த நிலையில், நடிகை விஜயலட்சுமி புகாரை வாபஸ் செய்துள்ளார். நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் விசாரணைக்காக ஆஜராகக் கோரி சீமானுக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட்- இந்தியாவை வீழ்த்தியது வங்கதேசம் அணி!
அதைத் தொடர்ந்து, வளசரவாக்கம் காவல்நிலையம் முன் இருமுறையும் ஆஜராகாத சீமான் தனது வழக்கறிஞர்கள் மூலம் கடிதம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.