Homeசெய்திகள்இந்தியாசந்திரபாபு நாயுடு நடத்திய நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்- 3 பெண்கள் பலி

சந்திரபாபு நாயுடு நடத்திய நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்- 3 பெண்கள் பலி

-

- Advertisement -

ஆந்திர மாநிலம் குண்டூரில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நடத்திய நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

3 killed, several injured in stampede at Chandrababu Naidu's meeting in Andhra Pradesh's Guntur
தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஆங்கில புத்தாண்டு,பொங்கல் முன்னிட்டு ஏழை பெண்களுக்கு கைத்தறி புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலை குண்டூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பெண்கள் சிலருக்கு புடவைகளை வழங்கி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

we-r-hiring

இந்த நிலையில் புடவைகளை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பெண்கள் அங்கு குவிந்தனர். சந்திரபாபு நாயுடு சென்ற பின் அக்கட்சித் தலைவர்கள் பெண்களுக்கு புடவைகளை வழங்கினர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் இறந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 29ஆம் தேதி நெல்லூர் மாவட்டத்தில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்ட கட்சி நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கால்வாயில் விழுந்து எட்டு பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் மறப்பதற்குள் குண்டூரில் இன்று சந்திரபாபு நாயுடு நாயுடு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூன்று பெண்கள் இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ