Homeசெய்திகள்இந்தியாமேற்குவங்கத்தில் அமலாகிறதா பொது சிவில் சட்டம்? வரைவு மசோதாவை ஆய்வு செய்ய குழு அமைத்து பாஜக...

மேற்குவங்கத்தில் அமலாகிறதா பொது சிவில் சட்டம்? வரைவு மசோதாவை ஆய்வு செய்ய குழு அமைத்து பாஜக அரசு அதிரடி!

-

- Advertisement -

“மேற்குவங்கத்தில் பொது சிவில் சட்ட வரைவு மசோதாவை ஆய்வு செய்வதற்காக, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்து பாஜக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.”மேற்குவங்கத்தில் அமலாகிறதா பொது சிவில் சட்டம்? வரைவு மசோதாவை ஆய்வு செய்ய குழு அமைத்து பாஜக அரசு அதிரடி!

 

we-r-hiring

இந்தியா முழுவதும் நீண்ட காலமாக விவாதப் பொருளாக மாறியுள்ள ‘பொது சிவில் சட்டம்’ (Uniform Civil Code – UCC) தொடர்பாக, மேற்குவங்க மாநிலத்திலும் அதனை அமல்படுத்துவதற்கான முதற்கட்டப் பணிகளை அம்மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மேற்குவங்கத்தில் பொது சிவில் சட்ட வரைவு மசோதாவை முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் ஒரு புதிய உயர்நிலைக் குழுவை அரசு அதிகாரப்பூர்வமாக அமைத்துள்ளது.

சமூக நடைமுறைகள் குறித்து தீவிர ஆய்வு
ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தலைமையிலான இந்தக் குழு, மேற்குவங்க மாநிலத்தின் பல்வேறு சமூகங்களின் கலாச்சாரம், பாரம்பரிய நடைமுறைகள் மற்றும் சட்டப் பின்னணிகளைத் தீவிரமாக ஆய்வு செய்யவுள்ளது.மாநிலத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துக்களையும், பல்வேறு அமைப்புகளின் ஆலோசனைகளையும் விரிவாகப் பரிசீலித்து, மேற்குவங்க மாநிலத்திற்குப் பொருத்தமான பொது சிவில் சட்ட வரைவு மசோதாவை இந்த நிபுணர் குழு இறுதி செய்யும் என்று அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மேற்குவங்கத்தில் அமலாகிறதா பொது சிவில் சட்டம்? வரைவு மசோதாவை ஆய்வு செய்ய குழு அமைத்து பாஜக அரசு அதிரடி!ஏற்கனவே 3 மாநிலங்களில் அமல்
இந்தியாவில் ஏற்கனவே உத்தரகாண்ட், குஜராத் மற்றும் அசாம் ஆகிய மூன்று மாநிலங்களில் பொது சிவில் சட்டம் பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வரிசையில், தற்போது அடுத்த மாநிலமாக மேற்குவங்கத்திலும் இந்தச் சட்டத்தைக் கொண்டு வர அரசு காய்நகர்த்தி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தச் சட்டத்திற்குத் தொடர்ந்து தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வரும் நிலையில், அரசின் இந்த அதிரடி நடவடிக்கை மேற்குவங்க அரசியலில் பெரும் விவாதத்தையும், தேசிய அளவில் பலத்த அரசியல் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

​ இலங்கை டூ அமெரிக்கா! இந்தியாவில் வளர்ந்தும் கிடைக்காத குடியுரிமை.. சட்டச் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஐடி ஊழியரின் விநோத வழக்கு!

MUST READ