Homeசெய்திகள்இந்தியா​ இலங்கை டூ அமெரிக்கா! இந்தியாவில் வளர்ந்தும் கிடைக்காத குடியுரிமை.. சட்டச் சிக்கலில் சிக்கித் தவிக்கும்...

​ இலங்கை டூ அமெரிக்கா! இந்தியாவில் வளர்ந்தும் கிடைக்காத குடியுரிமை.. சட்டச் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஐடி ஊழியரின் விநோத வழக்கு!

-

- Advertisement -

இந்திய பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) என்பது குடியுரிமைக்கான சான்றா அல்லது வெறும் பயண ஆவணமா என்ற விவாதம் அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள், இலங்கையில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் 44 வயது ஐடி ஊழியர் ஒருவர், தனது இந்திய பாஸ்போர்ட் பறிக்கப்படும் பட்சத்தில் ‘நாடற்றவர்’ (Stateless) ஆகும் அபாயத்தை எதிர்கொண்டு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.இலங்கை டூ அமெரிக்கா! இந்தியாவில் வளர்ந்தும் கிடைக்காத குடியுரிமை.. சட்டச் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஐடி ஊழியரின் விநோத வழக்கு!

​விவேக் சரவணமுத்து (44) என்ற அந்த ஐடி ஊழியர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மெட்ராஸ் உயர் நீதிமன்ற நீதியரசர் முகமது ஷஃபிக், வாஷிங்டன் டி.சி-யில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

we-r-hiring

​வழக்கின் பின்னணி என்ன?
​மனுதாரரான விவேக் சரவணமுத்து இலங்கையில் பிறந்தவர். எனினும், அவர் வளர்ந்தது, படித்தது எல்லாமே இந்தியாவில்தான். கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் அவர் இந்திய பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி அமெரிக்காவில் வசித்து, அங்குள்ள தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். ​இந்நிலையில், வாஷிங்டன் டி.சி-யில் உள்ள இந்திய தூதரகம் விவேக்கிற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. அதில், அடுத்த 10 நாட்களுக்குள் அவரது இந்திய பாஸ்போர்ட்டை தூதரகத்தில் ஒப்படைக்க வேண்டும் (Surrender) என உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இந்த நோட்டீஸை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்குத் தொடர்ந்தார்.

​உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு
​இந்த மனுவை விசாரித்த நீதிபதி முகமது ஷஃபிக் பிறப்பித்த உத்தரவுகள் வருமாறு, வாஷிங்டன் டி.சி-யில் உள்ள இந்திய தூதரகம், விவேக் சரவணமுத்துவை பாஸ்போர்ட்டை ஒப்படைக்கக் கூறி அனுப்பிய நோட்டீஸின் மீதான மேல்நடவடிக்கைகளை வரும் ஜூலை 22, 2026 வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் (Keep in abeyance). இந்த விவகாரம் மற்றும் தூதரகத்தின் நோட்டீஸை எதிர்த்துத் தொடரப்பட்ட மனு குறித்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) ஜூலை 22-ஆம் தேதிக்குள் விரிவான பதில் மனுவைத் (Counter Affidavit) நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

​நீடிக்கும் பரபரப்பு
​விவேக் சரவணமுத்துவின் இந்திய பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும் பட்சத்தில், அவருக்கு இலங்கை குடியுரிமையும் இல்லாததால், அவர் எந்த ஒரு நாட்டின் குடியுரிமையும் இல்லாத ‘நாடற்றவர்’ (Stateless person) நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குடியுரிமை மற்றும் பாஸ்போர்ட் விதிகளில் உள்ள சிக்கல்கள் காரணமாக எழுந்துள்ள இந்த சர்வதேச அளவிலான வழக்கு, சட்ட மற்றும் தூதரக வட்டாரங்களில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது.

நடுக்கடலில் விசைப்படகு மூழ்கி விபத்து: தத்தளித்த 8 சென்னை மீனவர்கள் நல்வாய்ப்பாக மீட்பு!

MUST READ