
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்தது.

விரைவில் தொடங்குகிறதா விக்ரமின் மகாவீர் கர்ணா?…. வெளியான அறிவிப்பு!
19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், சீன நாட்டின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய ஆண்கள் அணி தங்கம் வென்றனர். ருத்ரன்ஷ் பட்டேல், திவியன்ஷ் பன்வார், ஜஸ்வரி தோமர் 1893.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றனர்.

அதேபோல், நான்கு பேர் கொண்ட துடுப்புப் படகு போட்டியில் இந்தியா வெண்கலம் வென்றது. 6 நிமிடம் 10.81 வினாடிகளில் இலக்கை அடைந்து இந்திய அணி வெண்கலம் வென்றது.
எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தும் ‘சித்தா’ பட டிரைலர்!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தற்போது வரை இந்தியா ஒரு தங்கம் உள்பட 7 பதக்கங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.