spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிதிரைப்பட பாணியில் இரண்டு கரணம் அடித்த ஆட்டோ - உயிர்தப்பிய பயணிகள்

திரைப்பட பாணியில் இரண்டு கரணம் அடித்த ஆட்டோ – உயிர்தப்பிய பயணிகள்

-

- Advertisement -

சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், ஆட்டோவின் குறுக்கே வந்த தெரு நாயால்  ஆட்டோ ஒன்று தலைகீழாக கவிழ்ந்தது. இதில் அதிஷ்டவசமாக ஆட்டோவில் இருந்த ஓட்டுநர் உட்பட மூன்று பேர் உயிர்தப்பினர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று திருநின்றவூர் நோக்கி சென்றது, ஆட்டோ ஓட்டுநர் அரி என்பவர் ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு  பட்டாபிராம் பகுதியை கடந்து செல்லும்போது, எதிர்பாராத விதமாக சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை நெமிலிச்சேரி பகுதியில் தெரு நாய் ஒன்று சாலையின் குறுக்கே திடீரென  ஓடியது.

we-r-hiring

அப்போது நாய் ஆட்டோவில் சிக்கியதால் ஓட்டுநரின் கட்டுப்பட்டை இழந்த ஆட்டோ “திரைப்பட பாணியில் இரண்டு கரணம் அடித்து” தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் பயணிகள் மூன்று பேர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர்த்தபினர்.

விபத்தை அடுத்து அங்கு குவிந்த சக வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் விபத்தில் சிக்கிய ஆட்டோவை தூக்கி அதில் இருந்த நபர்களை பத்திரமாக மீட்டனர்.

தெரு நாய் குறுக்கே வந்ததால் பயணிகள் ஆட்டோ ஒன்று விபத்தில் சிக்கி திரைப்பட பாணியில் ஏற்பட்ட விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

MUST READ