spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"மருத்துவ ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குக"- அண்ணாமலை வலியுறுத்தல்!

“மருத்துவ ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குக”- அண்ணாமலை வலியுறுத்தல்!

-

- Advertisement -

 

we-r-hiring

சென்னை கிண்டியில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவர், பணியாளருக்கு ஊதியம் தர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடகா பின்பற்றிதான் ஆக வேண்டும் – அமைச்சர் துரைமுருகன்

இது தொடர்பாக அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “கடந்த ஜூன் 15 அன்று, பெரிய விளம்பரத்தோடு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால், அவரது தந்தையின் பெயரில் கிண்டியில் திறந்து வைக்கப்பட்ட கலைஞர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், கடந்த மூன்று மாதங்களாக மருத்துவர்களுக்கும் இதர பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்கவில்லை என்று இன்றைய நாளிதழ்களில் வந்துள்ள செய்து மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, விளம்பரம் செய்வதில் மட்டும்தான் கவனம் செலுத்துகிறதே தவிர, எந்தத் திட்டங்களும் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்வதில்லை. மூன்று மாதங்கள், மருத்துவர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்காமல் இருந்தால், அவர்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிடும் என்பதைக் கூட உணராமல் தி.மு.க. அரசு செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!

தி.மு.க. அரசு, வீண் விளம்பரங்களுக்குச் செலவிடுவதை நிறுத்திவிட்டு, அரசு மருத்துவர்களுக்கும் ஊழியர்களுக்கும் குறித்த நேரத்தில் ஊதியம் வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். உடனடியாக, கிண்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் ஊதியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும், முதலமைச்சர், மருத்துவமனைக்குத் தனது தந்தையின் பெயர் வைத்திருக்கும் மரியாதையையாவது காப்பாற்றிக் கொள்ள முன்வர வேண்டும் என்றும் தமிழக பா.ஜ.க. சார்பாக வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ