
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.

இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!
டி20 இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்தது. பின்னர், 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 97 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. மகளிர் கிரிக்கெட்டில் தோல்வி அடைந்த இலங்கை அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடகா பின்பற்றிதான் ஆக வேண்டும் – அமைச்சர் துரைமுருகன்
ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


