ஜெயம் ரவி நடிப்பில் இறைவன் திரைப்படம் உருவாகியுள்ளது. அகமது இயக்கியுள்ள இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சைக்கோ திரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சைக்கோ கொலையாக ராகுல் போஸ் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. மேலும் இப்படம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய ஜெயம் ரவி, ” நான் பொதுவாக அனைத்து விதமான பார்வையாளர்களுக்கு ஏற்ப தான் படம் நடிப்பேன். ஆனால் இறைவன் படத்தை குழந்தைகள் பார்க்க வேண்டாம். ஏ சர்டிபிகேட் படம் என்பதால் அவர்கள் பயப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் நாங்கள் ட்ரைலரிலேயே எதையும் மறைக்காமல் தெளிவுபடுத்தி இருக்கிறோம். இதுபோன்ற ஜானர் படங்களை விரும்புபவர்கள் இந்த படத்திற்கு ஆதரவளிப்பார்கள். நிச்சயம் நான் அடுத்தடுத்து பேமிலி ஆடியன்ஸ் காக நிறைய படங்கள் நடிப்பேன்” என்று பேசியுள்ளார்.
- Advertisement -