Homeசெய்திகள்இந்தியாநடுரோட்டில் போதை ஆசாமி அட்டகாசம்

நடுரோட்டில் போதை ஆசாமி அட்டகாசம்

-

- Advertisement -

நடுரோட்டில் போதை ஆசாமி அட்டகாசம்

கேரளாவில் மதுபோதையில் போக்குவரத்தை சரி செய்ய முயன்ற போதை ஆசாமியின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

போதை ஆசாமி

கேரள மாநிலம் கண்ணூர் உலிக்கல் சந்திப்பு பகுதியில் குடிபோதையில் வந்த நபர், நடுரோட்டில் நின்றுகொண்டு போக்குவரத்தை சீர் செய்துகொண்டிருந்தார். இதனை சாலையோரம் நின்றபடி காவலர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். போதை ஆசாமி போக்குவரத்தை சீர் செய்ததை பார்த்த வாகன ஓட்டிகள், ஆச்சர்யத்துடன் பார்த்து கொண்டிருந்தனர்.

we-r-hiring

அங்கும் இங்கும் நடந்தபடி, போக்குவரத்தை சீர் செய்துகொண்டிருந்த அந்த நபர், சிறிது நேரத்திற்கு பின்னர் அங்கிருந்து நகர்ந்தார். ஆனால் போலீசார் போதையில் போக்குவரத்தை சீர் செய்த அவரை அப்புறப்படுத்தாமல் போன் பேசியபடி அலட்சியமாக இருந்தது பேசும்பொருளாகியுள்ளது.

MUST READ