
அ.தி.மு.க. கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி தொடர்வதாக அக்கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி அறிவித்துள்ளார்.

நடுரோட்டில் போதை ஆசாமி அட்டகாசம்
தமிழக முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, ஜெயலலிதா ஆகியோரைக் குறிப்பிட்டு, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அவதூறாகப் பேசியதால், பா.ஜ.க. உடனான கூட்டணியில் இருந்து விலகுவதாக, அ.தி.மு.க. தலைமை நேற்று (செப்.25) அறிவித்திருந்தது.
எனினும், இந்த கூட்டணி முறிவுக் குறித்து, கட்சியின் தேசிய தலைமை பதிலளிக்கும் என பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி தொடர்வதாக அக்கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன் மூர்த்தி அறிவித்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும், இந்தியா கூட்டணியிலும் புரட்சி பாரதம் இடம் பெறாது என அறிவித்த அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தனி கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம் எனத் தெரிவித்தார்.
பழம்பெரும் நடிகை வஹிதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது!
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கே.வி.குப்பம் தொகுதியில் அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றவர் பூவை ஜெகன் மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.