spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஇரு சக்கர வாகனத்தில் மார்க்கெட் சென்ற வாலிபர் விபத்தில் பலி

இரு சக்கர வாகனத்தில் மார்க்கெட் சென்ற வாலிபர் விபத்தில் பலி

-

- Advertisement -

சென்னை திருநின்றவூரில் மார்க்கெட் சென்ற பொழுது விபத்தில் சிக்கி வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருநின்றவூர், ராஜாங்குப்பம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சத்யா(35) லாரி ஓட்டுனர். திருமணமாகாத இவர், தாய் சகுந்தலா (60) உடன் வசித்து வந்தார்.

இரு சக்கர வாகனத்தில் மார்க்கெட் சென்ற வாலிபர் விபத்தில் பலி நேற்று இரவு, ‘யமஹா எப்.இசட்’ இருசக்கர வாகனத்தில் மார்க்கெட் சென்றார்.ராஜாங்குப்பம் ரேசன் கடை அருகே செல்லும்போது, எதிரே வந்த டிராக்டர் மோதி, தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த திருநின்றவூர் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூர் ராமச்சந்திர மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

we-r-hiring

மேலும், ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், தப்பியோடிய ராஜாங்குப்பத்தைச் சேர்ந்த டிராக்டர் ஓட்டுனர் கோபால் (45)என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

MUST READ